முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பாய்மரப்படகு அகாடமி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, உலகின்  மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான  மெரினாவில் ரூ 7 கோடி செலவில்  ‘பாய்மரப் படகு அகாடமியும் . ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகுபயிற்சி மையம்’ ஒன்றும் ஏற்படுத்தப்படும். என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

மாணாக்கர்களின் பன்முக வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு காரணியாக உள்ளதால்,கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் எனதுதலைமையிலான\அரசு அளித்து வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவிளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில்,பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்தல்; பன்னாட்டு தரத்தில் விளையாட்டுமைதானங்கள் அமைத்தல்; உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல்; மாவட்டவிளையாட்டு வளாகங்களை அமைத்தல்; தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம்வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையினை வழங்குதல் போன்ற பல்வேறுதிட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதியதிட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. எங்களது தேர்தல் அறிக்கையில் கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்என நாங்கள் தெரிவித்துள்ளோம். அதனை செயல்படுத்தும் வகையில், உலகில்இரண்டாவது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் ‘பாய்மரப் படகு அகாடமி’ ஒன்றுநிறுவப்படும். மேலும், ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகுபயிற்சி மையம்’ ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சிமையம் 7 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உடற்கல்விமற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும்பேராசிரியர்கள் விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், நுணுக்கங்கள் மற்றும்ஆராய்ச்சிகளில் பயன்பெற ஏதுவாக மின்நூலகம் ஒன்று 2 கோடியே 51 லட்சம் ரூபாய்செலவில் அமைக்கப்படும்.தமிழ்நாட்டில் தேசிய மாணவர் படைக்கென தனியாக எந்த விதமான பயிற்சிநிலையமும், இல்லை என்பதை கருத்தில் கொண்டு தேசிய மாணவர் படைக்கெனதனியாக பயிற்சி அகாடமி ஒன்று 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றுநான் பேரவையில் அறிவித்தபடி மதுரை இடையாபட்டியில் தேசிய மாணவர் பயிற்சிஅகாடமி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளன.இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேசிய மாணவர் படை வீரர்கள் மலையேறும்பயிற்சியில் தங்களை செழுமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக மலையேறும் பயிற்சிக்கானசெயற்கை மாதிரி வடிவமைப்பு ஒன்று 30 லட்சம் ரூபாய்செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago