முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சிலிருந்து இந்தியாவின் ஜிசாட்-18 செயற்கைகோள் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்தியாவுக்கு சொந்தமான ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை உருவாக்கி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகிறது.

இதேபோல், ஒருசில தொலைத்தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

நாட்டில் தொலைத்தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறுகட்ட சோதனைகள் நடந்து வருகிறது.

இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 5-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியில் இருந்து 3.15 மணிக்குள் சாத்தியமான நேரத்திக் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்டவாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago