முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதியதாரர்களுக்கு 10 ரூபாயில் மின்னணு வாழ்வு சான்றிதழ் அரசு இ-சேவை மையங்களில் பெறலாம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஓய்வூதியர்களுக்கு 10 ரூபாய் சேவைக்கட்டணத்தில் அரசு இ -சேவை மையங்களில் வாழ்வு சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களில் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

தற்பொழுது, கூடுதல் சேவையாக நேற்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவக்கப்படவுள்ளது. மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், இந்நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால், அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வசூல் செய்யப்படும்.  இவ்வாறு அந்நத செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago