முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் மூடுபனி 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதம் : விமானப் போக்குவரத்தும் பாதிப்பு

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  டெல்லியில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக, 90-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகளும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 ரயில்கள் தாமதம் : டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு அடர்த்தியான மூடுபனி நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதுடன், 38 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், ரயில் சேவையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மூடுபனியால் 81 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 51 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த மோசமான வானிலை  நேற்று  காலையும் நீடித்ததால் ரயில் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 94 ரயில்கள் தாமதமாக வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 16 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டத்தால் டெல்லி விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் அவதி:
6 சர்வதேச விமானங்கள் மற்றும் 7 உள்ளூர் விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும், ஒரு உள்ளூர் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் மற்றும் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் வடநிலங்களிலும் கடும் பனி நிலவுகிறது. உத்தரபிரேதசத்தில் நிலவிவரும் கடும் பனி பொழிவு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்னோவில் பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago