முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலைதுறை சார்பில் நாட்டு மரங்கள் நடும் பணித் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வர்தா புயல் பல்வேறு பகுதிகளில் பலமாக தாக்கியது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒன்னரை லட்சத்திற்கும் மேலான மரங்கள் சாய்ந்தன. இதனால் இணையதள சேவை போக்குவரத்து மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர் இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான அரசுதுறை மின்வாரிய தொழிலாளர்கள் நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டுள்ளனர். சாய்ந்த மரங்களுக்கு மாற்றாக நாட்டு மரங்களான புங்கை, வேம்பு, பாதாம், பூவரசு, இயல்வாகை போன்ற நாட்டு மரங்களை நட நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இதில் முதல் கட்டமாக உத்திரமேரூர் அருகே வேடபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் மற்றும் ஏரிக்கரையில் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை ஐந்தினை குழுவும் இணைந்து நாட்டு மரங்களை நடும் பணி நேற்று துவங்கியது இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை செங்கல்பட்டு கோட்டப் பொறியாளர் ரமேஷ், உதவிக் கோட்டப் பொறியாளர், ஊழியகளுடன், ஐந்தினைக் குழு நிர்வாகி திருநாவுக்கரசு, மாசானமுத்து உட்பட நிர்வாகிகளுடன் இணைந்து மரக்கண்று நடும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்சியில் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி உட்பட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் ஐந்தினை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago