முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிவாசிகள் கிராமத்திற்கு ஒளியேற்றிய ரோட்டரி சங்கம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் - கொடைக்கானல் அருகே ஆதிவாசிகள் கிராமத்திற்கு சூரிய சக்தி மின்வசதி மூலம் ஒளியேற்றி வைத்தது ரோட்டரி சங்கம். கொடைகானல் தாலுகா தாண்டிக்குடியை அடுத்துள்ளது வள்ளாங்குளம் என்ற ஆதிவாசிகள் கிராமம். இந்த கிராமம் 250 ஆண்டுகள் பழமையானது ஆகும். நம் நாடு சுதந்திரம் அடைந்தும் கூட இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இங்குள்ள ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒருவர் மட்டும் 10 ம் வகுப்பு படித்துள்ளார். எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் இருந்தும் இந்த வள்ளாங்குளம் ஆதிவாசி  கிராமத்தை யாரும் இதுவதை கண்டுகொள்ளவில்லை. கொடைக்கானல் ரோட்டரி சங்கம் அதன் தலைவர் ராஜ்குமார் ராமன் தலைமையில் இக் கிராமத்தை கள ஆய்வு செய்தனர். அதில் இக் கிராமத்திற்கு உடனடியாக தேவையாக இருப்பது மின்சார வசதி. இதை அறிந்த கொடைக்கானல் ரோட்டரிசங்கம் உடனடியாக இக் கிராமத்திற்கு சூரிய சக்தி மூலம் மின்வசதி செய்து தர முடிவு செய்தது.
இந்த சூரிய சக்கி மின்விளக்குகள் வசதியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சரவணன் தலைமை தாங்கினார். கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சுரே~; முன்னிலை வகித்தார். கொடைக்கானல் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் ராமன் இந்த சூரிய சக்தி மின்விளக்கு வசதியினை இக் கிராமத்திற்கு 2017ம் ஆண்டின் ரோட்டரி சங்கத்தின் புத்தாண்டு பரிசாக துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் ரோட்டரி சங்க செயலாளர் ஜஸ்வந்த், நிர்வாகிகள் மீரா ராஜ்குமார்,கார்த்திக், வசந்தராஜன், பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் கனவு திட்டமான இந்த சூரிய சக்தி மின் வளக்கு திட்டத்தால் மின் ஒளியையே இது வரை கண்டிராத இந்த வள்ளாங்குளம் ஆதிவாசி மக்கள் அணைவரது குடிசைகளும் மின்வசதி பெற்று கிராமமே ஒளிமயமானது.
இது பற்றி கொடைக்கானல் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் ராமன் கூறியதாவது:- ரோட்டரி சங்கம் இக் கிராமத்தை ஆய்வு செய்து உடனடியாக தேவைப்படும் அடிப்படை வசதியான மின் வசதி செய்ய திட்டமிடப்பட்டது. இயற்கையோடு இணைந்த சூரிய சக்தி மின் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதனால் இக் கிராமம் ஒளி பெற்றுள்ளது. இது போல மேலும் ஆய்வு செய்து ரோட்டரி சங்கம் மூலம் மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சூரிய சக்தி மின்வசதி செய்ய திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
இக்கிராமத்தை சேர்ந்த தலைவர் சுரேந்தர் கூறியதாவது: எங்கள் கிராமம் 250 ஆண்டுகள் பழமையானது. வசதிகள் இன்றி நாங்கள் சிரமப்படுகின்றோம். தற்போது மின்விளக்கு வசதி கிடைத்துள்ளது. இதற்காக ரோட்டரி சங்கம் அதிகாரிகள் உள்ளிட்ட அணைவருக்கும் இக் கிராமத்தின் சார்பில் நன்றி கூறுகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்