ஒட்டன்சத்திரம் அருகே கைதி தற்கொலை

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திண்டுக்கல்
4

ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கப்பலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 55) இவரது மகன் ப.மதன்குமார் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டபோது கோபத்தில் பக்கத்து வீட்டுக்காரரான கணவன்-மனைவி கோபால்-ஈஸ்வரி ஆகியோரை வெட்டி படுகொலை செய்தனர்.


இதுசம்மந்தமாக கள்ளிமந்தையம் காவல்துறையினர் தந்தை பழனியப்பன், மகன் மதன்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12.00 மணியளவில் வீரலப்பட்டி சின்னக்கரட்டுப்பகுதியில் ஒரு ஆண் பிணம் ஊஞ்சல் மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சத்திரப்பட்டி காவல்துறையிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சத்திரப்பட்டி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தூக்கில் தொங்கிய அவருடைய பாக்கெட்டில் வழக்கறிஞர் தினே~; என்று எழுதப்பட்ட துண்டு காகிதத்தில் வழக்கறிஞரின் கைபேசி எண் இருந்தது. போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் பழனியப்பன் என்றும், இவர் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார் என்பதும் தெரியவருகிறது. பழனியப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: