முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14,38,106- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், வழங்கினார்:

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரூ.14,38,106- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு

அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், தேசிய தோட்டக்கலை மானியத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மானிய விலையில் தலா ரூ.4,51,450- வீதம் ரூ.13,54,350- மதிப்பிலான மினி டிராக்டர் வாகனத்தினையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தொகுப்பு நிதி வங்கி கடன் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிக்கு ரூ.83,756-க்கான காசோலையினையும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.14,38,106- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தாமஸ்பிரிட்டோ முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விஜயக்குமார் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிலிங்கம் மாவட்ட தாட்கோ மேலாளர் தங்கவேல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சந்திரசேகரன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago