தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      ராமநாதபுரம்
rmd

ராமநாதபுரம்,

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசுப் பைகள் வழங்கும் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய மக்கள் அனைவரும் உழவர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பொருட்கள் அனைத்தும் உள்ளடக்கிய பரிசுப் பைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பச்சரிசி - 1கி, சர்க்கரை - 1 கி, முந்திரி - 20 கிராம், உலர்ந்த திராட்சை - 20 கிராம், ஏலக்காய் - 5 கிராம், இரண்டடி கரும்பு ஆகிய பொருட்கள் உள்ளடக்கிய பரிசுப் பைகள் விலையில்லாமல்  வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடலாடி வட்டத்தில் 28ஆயிரத்து 992 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கமுதி வட்டத்தில் 29ஆயிரத்து 688 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கீழக்கரை வட்டத்தில் 31ஆயிரத்து 774 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 63ஆயிரத்து 447 குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 31ஆயிரத்து 597 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ராமநாதபுரம் வட்டத்தில் 66ஆயிரத்து 752 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ராமேசுவரம் வட்டத்தில் 17ஆயிரத்து 525 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருவாடானை வட்டத்தில் 54ஆயிரத்து 903 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆக மொத்தம் 8 வட்டங்களில் உள்ள 3லட்சத்து 24ஆயிரத்து 678 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. 

தமிழக அரசின் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்களை அன்வர்ராஜா எம்.பி. முன்னிலையில் கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகள் மூலமாக அந்தந்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஹேமா சலோமி, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பத்மகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கோ.ஜெயசங்கர், ராம்கோ பொது மேலாளர் பாட்ஷா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: