எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகார் - ஹரியாணாவின் குருகிராமில் ஏராளமான இறைச்சி கடைகள் உரிய உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின்போது 9 நாட்களும், பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் இறைச்சி கடைகளை மூடும்படி 200-க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் திரண்டு வந்து உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர். மேலும் கே.எப்.சி போன்ற அசைவ உணவகங்களையும் மூடும்படி அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பீதியடைந்த சில உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குருகிராம் சிவசேனா தலைவர் கவுதம் சைனி கூறும்போது, ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலம் விஹாரில் சேனா தொண்டர்கள் ஒன்று திரண்டு அங்கு இயங்கி வந்த இறைச்சி கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். மேலும் அசைவ உணவகங்களையும் மூடும்படி கேட்டுக் கொண்டோம்’’ என்றார். அதே சமயம் மிரட்டல் விடுத்து கடைகளை மூடச் சொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என குருகிராம் போலீஸ் இணை ஆணையர் மணிஷ் சேகல் எச்சரித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |