எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த சில மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள்.
முதல் மதிப்பெண்தான் உங்கள் லட்சியமா?
அப்படியானால் உங்கள் படிப்பு முறையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால் எல்லாப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். படிக்கும்போதே முக்கிய தகவல்களைக் கோடிட்டு வைத்துக்கொண்டு தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென தனியாக ஒரு நோட்டுப் போட்டு வைத்துக் கொண்டால் தேர்வு நேரத்தில் புரட்டிப் பார்ப்பது எளிதாக இருக்கும்.
பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்கள் வகுப்புத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி எழுதிப் பாருங்கள். இந்தப் பாடம் தேவையில்லை அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் வராது என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஒதுக்காதீர்கள்.
மனப்பாடம் செய்ய....
கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை சூத்திரங்களை தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத் திருப்புதலின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த சூத்திரங்களை மனப்பாடமாக யாரிடமாவது ஒப்பித்து சரிபார்க்கவும். கட்டுரைகளை மனப்பாடம் செய்யும்போதே துணை தலைப்புகளை நன்கு நினைவில் பதித்துக் கொள்ளவும். தேர்வு நேரத்தில் கட்டுரை முழுவதையும் படிக்க முடியாமல் போகலாம். துணைத் தலைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனால்போதும் உள்ளே இருக்கும் சாராம்சம் நினைவுக்கு வந்துவிடும்.
கால நேர நிர்வாகம்
தேர்வு காலத்தில் நேர நிர்வாகம் முக்கியம். தேர்வு தேதிகள் தெரிந்தவுடன் மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்தெந்தப் பாடத்துக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றனவோ அந்த சப்ஜெக்ட்டுகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு இந்த சில மாத காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் இந்த சப்ஜெக்ட்டைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி நிச்சயம்.
பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கக் கையாள வேண்டிய 9 முறைகள்..!
தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவது பெற்றோரின் இயல்பே. ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. எனவே அதற்கான சில முக்கிய ஆலோசனைகளை இப்பதிப்பில் காணலாம்.. இவற்றை பெற்றோர்கள் முறையாக பின்பற்றினால் அவர்களின் விருப்பத்தை அவர்களது குழந்தைகள் நிறைவேற்றுவார்கள்.
1. தொலைக்காட்சி..
ஒரு வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில் படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். இந்த விதியை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம்.
2. தொலைபேசி..!
படிக்கும் நேரத்தில் வீட்டு தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறித்து ஒவ்வொரு பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். படிக்கும் நேரத்தில் அவசியமற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது தடை செய்யப்பட வேண்டும். மேலும் நேரம் காட்டும் கருவியை இணைத்து வைத்து நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கலாம். அதேசமயம் ஏதேனும் முக்கிய பாட விஷயங்களைப் பற்றியோ வீட்டுப்பாடம் பற்றியோ சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில் தங்களின் பிள்ளைகள் பேச வேண்டியிருந்தால் அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
3. அறை வசதி..!
வீட்டில் போதுமான வசதி இருந்தால் உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். அந்த அறை அழகாக இருக்கிறதா என்பதை காட்டிலும் போதுமான வசதியுடன் இருக்கிறாதா? என்பது தான் முக்கியம். மேலும் உங்களின் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேனா பென்சில் ரப்பர்உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
4. எழுத்து வேலைகள்..
இரவு நேரத்தில் குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். சில நாட்களில் பிள்ளைகள் பள்ளியிலிருந்து விரைவிலேயே வீடு வந்துவிட்டால் உணவுக்கு முன்பே வீட்டுப் பாடத்தை முடிக்க உதவலாம். மேலும் வேலைகளை முறையாக எழுதி வைத்துக் கொள்ள உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் எந்த குழப்பமும் வராது.
5. படிக்கும் நேர அளவு..!
உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று கவனியுங்கள். அதற்கேற்ப அவர்களுக்கு ஒவ்வொரு வேலையை முடித்த பிறகும் சிறிதுநேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
6. தேர்வு பயம்...
தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் மிக அதிகமாக இருக்கும். மேலும் தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண் விழித்து சிலர் படிப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை செய்வதை தவிர்த்து விடுதல் நலம். இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும்.
7. தேர்வு எழுதும் முறை..
கேள்வித் தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும் தெரியாத கேள்விகளை முதலில் தவிர்த்துவிட்டு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதி மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும் தேர்வு எழுதும் முன்பாக நன்றாக மூச்சை இழுத்துவிட்டு அமைதியுறுமாறும் உங்கள் குழந்தைகளிடம் தவறாமல் கூறவும். மேலும் விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக இட வேண்டும்.
8. வீட்டுப்பாடங்கள்..!
சில சமயங்களில் பெரியளவிலான வேலைகள் வீட்டுப்பாடமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் உங்களின் பிள்ளைகள் சோர்வடைந்து எதையும் செய்ய மனமின்றி இருப்பார். அந்த நேரத்தில் நீங்கள் பரிவுடன் நிலைமையை கவனித்து சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு இதைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும். மேலும் அசைன்மென்ட் தருவது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்துரையாட ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படி அந்த குறிப்பில் கேட்கலாம்.
9. அன்பால் அரவணையுங்கள்..!
உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். அந்த பாடத்தை முடிந்தால் நீங்களே நேரம் ஒதுக்கி சொல்லி தரலாம் அல்லது பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இது குறித்து பேசலாம்.
எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும் சாதுவான மற்றும் இயல்பான நிலையில் இருக்கும் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் படிப்பு விஷயத்தில் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சரியான முறையில் தீர்வு காண பெற்றோர் முயல வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரண்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
16 Oct 2025ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை
16 Oct 2025புதுடெல்லி: பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வந்தார்.