எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.
சி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.
பலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.
இத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.
தமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2025அமராவதி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
-
உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில
-
‘மோந்தா’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
27 Oct 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம்: கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
27 Oct 2025புதுடெல்லி : நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரத்தில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
-
பயங்கரவாதிகள் பட்டியலில் பிரபர நடிகர் சல்மான்கான்..? பின்னணியில் பாகிஸ்தான் அரசு
27 Oct 2025லாகூர், பிரபர நடிகர் சல்மான்கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைப்பு
27 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து குறைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


