இந்தோனேஷியா விபத்தில் சிக்கிய மேலும் ஒரு லயன் ஏர் விமானம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
lion air Flight 09-11-2018

ஜாகர்த்தா,இந்தோனேஷியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் மற்றுமொரு விமானம் விபத்தைச் சந்தித்துள்ளது.சுமத்ரா தீவிலுள்ள பெங்குலு விமான நிலையத்திலிருந்து தலைநகர் ஜகார்த்தா நோக்கி   புறப்படுவதற்கு முன்னதாக, அந்த விமானம் ஓடுபாதைக்கு இழுத்துவரப்பட்டது.அப்போது ஒரு கம்பத்தில் இடித்து விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. அதையடுத்து பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். 189 பயணிகளுடன் லயன் ஏர் விமானம் கடலுக்குள் விழுந்து சில நாட்களிலேயே நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து