எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நொய்டா : நாடு தற்போது புதிய நீதி மற்றும் புதிய பாணியுடன் பயணித்து வருவதாகவும், தன்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுவதாகவும் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
பிரச்சார கூட்டங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகள் மற்றும் பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் நொய்டாவில் நேற்று பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடத்திய பால்கோட் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் மொழியில்...
இந்த உரையின் போது அவர் “முதன்முறையாக நமது நாடு பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் அளித்துள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த அரசுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் உள்துறை அமைச்சரை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து விட்டன. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதற்குப் பதிலடி தர நமது படைகள் தயாராக இருந்தன. ஆனால் அவற்றின் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
ஓட்டு வாங்குவதற்காக...
மேலும் மோடி, “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் என்று எதிர்பார்த்தது. அதனால் எல்லை பகுதிகளில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்தது. இந்த முறை நாம் வான் வழியில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிரவைத்துள்ளோம். சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் பால்கோட் தாக்குதல்கள் மூலம் தற்போது இருப்பது புதிய இந்தியா என்பதை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் இந்தியா புதிய நீதி மற்றும் பாணியுடன் பயணித்து வருவகிறது. என்னை கடுமையாக விமர்சித்து ஓட்டு வாங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நடந்துவருகிறது” எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ