முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டிங் சிறப்பாக செய்ய மனநிலை அமைதியாக இருக்க வேண்டும் - ஷிகர் தவான் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : அமைதியான நிலையில் இருக்கும்போது நன்றாக விளையாடுவதாகவும், மனவேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறினார்.

கடந்த 6 மாதமாக சதம் அடிக்காத இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் 143 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்துக்கு விடை அளித்தார். போட்டிக்கு பிறகு ஷிகர் தவான் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

எனக்கு தெரியாது...

விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் நான் பத்திரிகைகள் படிப்பதில்லை. எனக்கு தேவையில்லாத விஷயங்களை எடுத்து கொள்ளமாட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. எனது சொந்த உலகில் நான் வாழ்கிறேன். எனது எண்ணங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன்.

ஒப்பிடக்கூடாது...

அமைதியான நிலையில் இருக்கும்போது நான் நன்றாக விளையாடுவேன். மன வேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவேன். என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து எனது செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்புவேன்.  ரிஷப் பந்தை, டோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆஷ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்க வைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். பனியின் தாக்கம் காரணமாக பந்து கையை விட்டு நழுவியது. எனவே கேட்ச் செய்வது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து