எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர் காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு நேற்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கவர்னர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், நேற்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன் பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்து விட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.


