முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் ‘ரன்அவுட்’ ஆட்டத்தின் திருப்புமுனை: சச்சின் தெண்டுல்கர்

திங்கட்கிழமை, 13 மே 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.

1 ரன்னில் பறிபோனது...

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

திருப்புமுனை...

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து