முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்- இங்கிலாந்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      உலகம்
Image Unavailable

லண்டன், இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்த போது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது. இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்த போது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில், அந்த வழியாக காரில் வந்த ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோயல் ஸ்நார் என்பவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஜோயல் ஸ்நாரின் துரித நடவடிக்கையால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து