தடுப்பு மீது ஏறிக் குதித்து மக்களை சந்தித்த பிரியங்கா

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      இந்தியா
Priyanka 2019 05 14

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் பாதுகாப்புக்கு அமைத்திருந்த தடுப்பை தாண்டி குதித்துச் சென்று மக்களைச் சந்தித்தார் பிரியங்கா காந்தி.

தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் என்ற இடத்தில் மக்கள் கூட்டத்தினரிடம் இருந்து பிரித்து தடுப்புகளை அமைத்து பாதுகாப்பாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் திடீரென தடுப்பு வழியாக ஏறிக் குதித்து அவர் மக்களை சந்தித்தார். பிரியங்கா காந்தி தடுப்பின் மீது ஏறிக் குதித்ததால் பாதுகாவலர்களும் வேறு வழியின்றி தடுப்பின் மீது ஏறிக் குதித்து பாதுகாப்பு அளித்தனர்.

அது போல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் தனக்கு எதிராக முழக்கமிட்டவர்களை காரிலிருந்து இறங்கி சென்று சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார். காரிலிருந்து இறங்கிய அவர் கோஷமிட்டவர்களுக்கு கை கொடுத்து விட்டு சிரித்து பேசி விட்டு சென்றார். இதனால் அங்கு கோஷமிட்டு கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் நின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து