கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு சோனியா அழைப்பு

வியாழக்கிழமை, 16 மே 2019      அரசியல்
sonia-gandhi 2019 01 20

புது டெல்லி, டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 19-ம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு  எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து