மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை - மும்பையில் இயல்பு நிலை பாதிப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      உலகம்
heavy rain again mumbai 2019 07 08

மும்பை : மும்பையில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பெய்யும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பை, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது பெய்த கனமழை காரணமாக ஏராளமான இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தாதர் ஹிந்த்மாதா, பரேல், சேனாபதி பாபட் மார்க், சயான், பிரதிக்‌ஷா நகர், செம்பூர் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடாலாவில் சாலையில் தேங்கிய நீர் சில கட்டிடங்களில் உள்ள குடியிருப்புக்குள் சென்றது. மழை காரணமாக மும்பை முழுவதும் 12 இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதே போன்று செம்பூரிலும் சில இடங்களில் குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழை நீர் புகுந்தது. தென் மும்பை, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதலே பெய்த கனமழை காரணமாக சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கின. பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் ஏற்கெனவே பரபரபான போக்குவரத்து மேலும் ஸ்தம்பித்தது. தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில்களை இயக்குவதில் சிரமம் நீடித்தது. மேலும் காலை ஒன்பதரை மணி முதல் கனமழையால் விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெளிவாக பார்க்க முடியாத சூழல் நிலவுவதால் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வர வேண்டிய சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பப்பட்டன.

இந்நிலையில் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டியத்தில் பாஸ்கர் , தானே உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து