ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் இம்ரான்கானிடம் அதிபர் டிரம்ப் உறுதி

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      உலகம்
trump 2019 07 23

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர்  அதிபர் டிரம்பை நேற்று சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் வலியுறுத்தினார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்றும் அவர் இம்ரான் கானிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், என்னால் உதவ முடியும் என்றால், நான் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறேன் என்றார். மேலும் பிரதமர் மோடியும் என்னிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்த உதவும்படி கேட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்யுமாறு டிரம்பை பிரதமர் மோடி கேட்டதாக கூறியதை இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து