ராமேசுவரம் திருக்கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 73 லட்சம்.

புதன்கிழமை, 24 ஜூலை 2019      ராமநாதபுரம்
24 rms temple

 ராமேஸ்வரம்  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் திறந்து  எண்ணப்பட்டதில் ரூ.73  லட்சத்திற்கும் மேலாக  கிடைத்திருந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும்  திறந்து எண்ணுவது வழக்கம்.அதன் பேரில்  ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும்  பஞ்சமூர்த்திகள்  சன்னதிகளில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான  நம்புகோவில் உள்பட உபகோயில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நேற்று  திறக்கப்பட்டது.பின்னர் பக்தர்களால்  உண்டியலில் காணி்க்கையாக செலுத்தப்பட்ட   பணத்தை  திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கொண்டு வரப்பட்டது.அங்கு  திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில்  காணிக்கை பணம் எண்ணப்பட்டது.இதில் ரொக்க பணமாக ரூ.73 லட்சத்து 59 ஆயிரத்து 753 ரூபாயும், தங்கம் 61 கிராம் 500 மில்லி கிராமும்,வெள்ளி 3 கிலோ 32 கிராமும் காணிக்கையாக கிடைத்திருந்தது.உண்டியல் காணிக்கை  எண்ணும் பணியில் திருக்கோயில் மேலாளர் முருகேசன்,  உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கார்கள் அண்ணாதுரை,  கலைசெல்வன், கண்ணன், செல்லம், மற்றும் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்,சேவார்த்திகள் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து