திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

புதன்கிழமை, 24 ஜூலை 2019      திண்டுக்கல்
24 lovers news

திண்டுக்கல்,- திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம பழனி அருகிலுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மகன் காளியப்பன்(24). தாராபுரத்தைச் சேர்ந்தவர் சசிபிரபா(24). இவர்கள் இருவரும் தாராபுரத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த வருடம் படிப்பை முடித்த போதிலும் தொடர்ந்து காதலித்து வந்தனர். தற்போது சசிபிரபா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். காளியப்பன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணிபுரிந்து தற்போது அதனை விடுத்து அரசு தேர்வை எழுதி வேலைக்காக காத்திருக்கிறார்.
இவர்கள் காதல் விபரம் சசிபிரபாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்களது திருமணத்தை பதிவும் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை பிரித்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. சக்திவேலிடம் மனு அளித்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் காதல் ஜோடி சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று இரு தரப்பு பெற்றோரிடமும் எழுதி வாங்கி கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து