திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் வாசிப்பு திறனை மேம்படுத்த போட்டிகள்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      திண்டுக்கல்
25 books reading

திண்டுக்கல்,- திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் மைய நூலகம் மற்றும் ஜி.டி.என். வாசிப்பாளர் கழகம் இணைந்து வாசிக்க வாங்க ஜூலை_2019 விழா நடைபெற்றது.
விழாவில் வாசிப்பு திறமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு போட்டிககள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் பாலகுருசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற நடுவர் கவிஞர் குயிலன் ''வாசிக்க  வாங்க '' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மற்றும் அதன் பயன்கள் பற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் கல்லூரியின் இயக்குனர் துரை ரெத்தினம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நூலகத் துறைத்தலைவர் அரவிந்த், தமிழ் துறை தலைவர் சுஜாதா, வாசிப்பாளர் கழக உறுப்பினர்களான தலைவர் சையதலி பாத்திமா, துணைத்தலைவர் காயத்ரி, செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் லோகாம்பிகா, நிதியாளர் திவ்யதர்ஷினி, சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து