ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது:

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      ராமநாதபுரம்
28 fisherman news

ராமேசுவரம்,-  கச்சத்தீவு அருகே  மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 7 மீனவர்களை   இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.
 ராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 300 க்கும் மேற்பட்ட  விசைப்படகுகளில் ஆயிரத்துக்கு  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு,தலைமன்னார் கடல் பகுதியில்   வழக்கம்போல் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.அதன் பின்னர் ராமேசுவரம் மல்லிகை நகரை சேர்ந்த  துரைசிங்கம் என்பவரின்  படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் சோதனை என்ற பெயரில்  படகிலிருந்த விலை உயர்ந்த இறால் மீன்களை அள்ளி இலங்கை கடற்படையினர் கடலில் வீசியுள்ளனர்.தொடர்ந்து படகிலிருந்து  நாகராஜ்,இன்னாசி, பெனடிக்,ஜோசப்பால்ராஜ்,சுப்பிரமணியன்,முனியசாமி,சத்தியசீலன், உள்பட 7  மீனவர்களையும்  கைது செய்தனர்.பின்னர் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று உயர் அதிகாரிகள் மத்தியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து