முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் அவரது குடும்பத்தினர்:ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் துவக்கம்.

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      ராமநாதபுரம்
Image Unavailable

    ராமேசுவரம்,  மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
 இந்தியாவின் முக்கிய புனித ஸ்தாலமான ராமேசுவரம் புண்ணிய பூமியில் பிறந்தவர்  மறைந்த  முன்னாள்  இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.இவர் தனித்திறமையில் படிப்பில் உயர்ந்து நல்ல எண்ணங்களாலும்,  சொந்த முயற்ச்சி திறனாலும் இந்திய விண்வெளி துறையை உலகத்திலுள்ள வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவாக்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.தனது வாழ்க்கை முழுவதும் இந்தியாவிற்கு அற்பணித்து இந்திய இளைஞர்கள், மாணவர்களின் மனதில் முன்னோடி வழிகாட்டியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம்.  கடந்த 2015 ஜூலை 27- ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாடும்போது தனது உயிரை நாட்டிற்காக தியானம் செய்தார்.இவரது உடல் 1 லட்சத்திற்கு மேலான பொதுமக்களின் கண்ணீரோடு  ராமேசுவரம்  அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.அப்துல்கலாமின சாமாதியை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில்  சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் பொதுமக்களின் மனதை கவரும் வகையில் நினைவகமாக கட்டப்பட்டு அதற்கு அப்துல்கலாம் தேசிய நினைவகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.இந்த நினைவகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அப்துல்கலாமின் குழந்தைப் பருவம் முதல் இறுதி நாள் வரையிலான வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. அதுபோல கலாமின் கண்டுபிடிப்பான அக்னி ஏவுகணையின் மாதிரி உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் மாதிரிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள், வாங்கிய விருதுகள், அடைந்த பாராட்டு சான்றுகள்,அணிந்த உடைகள் என நினைவகம் பகுதி நிறைந்திருக்கும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி இந்திய நாட்டிற்காக அற்பணித்தார். திறக்கப்பட்ட நாளிலிருந்து   இரு ஆண்டுகளில் மட்டும் இந்த நினைவகத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த சுமார் 68 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். ராமேசுவரம் வரும் யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகள்,திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டினர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் இடமாக மட்டுமல்ல வணங்கிச் செல்லும் நினைவிடமாகவும் திகழ்கிறது.இந்த நிலையில்  அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அவரது தேசிய நினைவகத்தில் கடைபிடிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சாமதியில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல்வாதிகள்,சமூக ஆர்வாளர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியொட்டி அப்துல்கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,ஒவியப்போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பொதுமக்களை கவரும் வகையில் பழங்களிலும்,பென்சிலிலும், அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்டு பலகையில் ஒவியங்கள் வரையப்பட்டு மணலில் சித்தரிக்கப்பட்டிருந்தது.நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில்  மாணவர்களின் கூட்டம் அலை மோதியது.
 
      ஒரு கோடி மரம் நடும் திட்டம் துவக்கம்:
 நினைவு தினத்தின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அப்துல்கலாமின் கனவுகளில் ஒன்றான வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்,சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை நிறைவேற்றும் வகையில்   ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டத்தையும், அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்ட பயண விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பச்சை கொடி அசைத்து வாகனத்தை நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேரன்கள் சேக்சலீம்,சேக்தாவூத்,அண்ணன் மகள் நசீமாபேகம் உள்பட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து