உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்: ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
best cities information 2019 08 01

வாஷிங்டன் : உலக அளவில் மாணவ, மாணவிகளுக்கான சிறந்த நகரங்கள் எவை? என்பதை பார்ப்போம்.

ஒவ்வொரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி தகுதியினையும் அவர்களின் திறமையையும் பொறுத்தே மாறுபடுகிறது. மாணவர்களின் கல்வியே, உலக அளவில் எந்த நாட்டின் தரத்தையும் உயர்த்துகிறது. அப்படி இருக்கையில் அவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பது முக்கியமான ஒன்றாகியிருக்கிறது. எனவே, மாணவர்கள் கல்வி கற்க சிறந்த நகரங்கள் எவை? என்பதை உலகளாவிய ஆலோசனை கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனும் அமைப்பு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், வேலைவாய்ப்பு, மாணவர்கள் விரும்பக் கூடியது, கல்வி கட்டணம் குறைவு ஆகிய காரணிகளை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசையில் உலக அளவில் மாணவர்களுக்கான மிகச் சிறந்த நகரமாக மீண்டும் லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு:

லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், முனிச், பெர்லின் மாண்டிரல், பாரிஸ், சூரிச், சிட்னி, சியோல் ஆகியவை உள்ளன. இந்திய அளவில், பெங்களூரு(81), மும்பை(85), டெல்லி(113), சென்னை(115) ஆகியவை மாணவர்களுக்கான சிறந்த நகரங்களாக உள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து