முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதசார் எழுத்துக்களுக்கு தடை - சீன அரசு அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உணவகங்களில் இஸ்லாம் மதம் சார்ந்த குறியீடுகளோ, எழுத்துக்களோ இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் 2 கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் கடைகள் மற்றும் உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் உணவகங்களில் மதம் சார் குறியீடுகள் மற்றும் அரபு எழுத்துக்களுடன் கூடிய விளம்பர புகைப்படங்களை பெய்ஜிங் அதிகாரிகள் அகற்ற சொல்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹலால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் 11 உணவகங்களுக்கு அண்மையில் சென்ற அதிகாரிகள் ஹலால் என்று அரபு மொழியில் எழுதப்பட்ட விளம்பர பதாதைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.

ஆனால் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இது போன்று உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சீனாவின் இன மற்றும் மத விவகாரங்கள் குழு விளக்கம் அளிக்க மறுத்து விட்டது. இதை அடுத்து சீனாவின் கலாச்சரத்திற்கு இணங்கி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே அந்நாட்டில் உள்ள மசூதிகள் கட்டுமானம் மத்திய கிழக்கு நாடுகளை போல் அல்லாமல் பகோடாஸ் எனப்படும் அடுக்கு கோபுரங்கள் போல் மாற்றுவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து