முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன்: அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடனை 2017-ல் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 7 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

இதற்கிடையே, ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வந்தவர் ஹம்ஸா பின்லேடன். அவர் அமெரிக்காவை பற்றி தொடர்ந்து மிக கீழ்த்தரமாக விமர்சித்து வந்தார் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து