முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பி.கே.என் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: டி.எஸ்.பி.,அருண் பங்கேற்று சிறப்புரை:

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை திருமங்கலம் சப்-டிவிசன் டி.எஸ்.பி.,அருண் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் விபத்துக்களை தடுத்திடும் வகையில் திருமங்கலம் பகுதி தேசிய நெடுஞ:சாலை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகர் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரங்கத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புர்வு முகாம் சிறப்புடன் நடைபெற்றது.இந்த முகாமிற்கு பி.கே.என் கல்லூரி தலைவர் இரா.விஜயராஜன் தலைமை வகித்தார்.திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர்.கணேசன் வரவேற்று பேசினார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் திருமங்கலம் சப்-டிவிசன் டி.எஸ்.பி.,அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்: தற்போது நடைபெறுகின்ற சாலை விபத்துக்களில் பெரும்பாலும் 15 முதல் 40 வயது வரையிலானவர்கள் உயிரிழக்கின்றனர்.இது போன்று உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக உயிரிழப்பதால் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.குற்றச் சம்பவங்களில் நிகழ்ந்திடும் உயிரிழப்புகளைக் காட்டிலும் சாலை விபத்துக்களில் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பது பேரிடர் பாதிப்புகளை விட மிகவும் அதிகமாகும்.எனவே வாழ்க்கையில் சாதனை படைத்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மாணவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்குவதுடன் போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா சமுதாயத்தினை உருவாக்கிட ஒத்துழைப்பு தந்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்து சென்றனர்.முகாமின் நிறைவில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லிங்கையா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து