இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் ஆட்டம் ரத்து

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORT-4 2019 08 09

Source: provided

கயானா:  இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

மழையின் காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து