இலங்கை ரசிகர்கள் வில்லியம்சனுக்கு அளித்த பிறந்தநாள் பரிசு

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORT-5 2019 08 09

Source: provided

இலங்கை : வில்லியம்சனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இறுதி வரை போராடி தோல்வி அடைந்தபோது அவரது கூலாக அனுகுமுறையால் பல உலக கிரிக்கெட் ரசிகர்கள் வில்லியம்சனின் ரசிகர்களாக மாறினர்.

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி விளையாடுகிறது. இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது.

நேற்று வில்லியம்சனுக்கு 29-வது பிறந்தநாள். பயிற்சி ஆட்டத்துக்கு காண வந்த ரசிகர்கள் வில்லியம்சனுக்கு பிறந்தநாள் கேக் எடுத்து வந்தனர். வில்லியம்சனும் அவர்களை ஏமாற்றாமல் களத்தில் இருந்து போட்டிக்கு நடுவே ரசிகர்களை நோக்கிச் சென்று, அவர்களிடம் இருந்து கேக்கை பெற்றுக் கொண்டார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கேனே வில்லியம்சனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து