பாகிஸ்தானில் மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      உலகம்
Ranjit Singh s statue 2019 08 11

லாகூர்  : பாகிஸ்தானில் உள்ள மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய இருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆட்சி செய்தவர் மன்னர் ரஞ்சித் சிங். இவரது 180-வது பிறந்த தினத்தின் போது லாகூர் துறைமுகத்தில் 9 அடி உயரம் கொண்ட அவரது சிலை திறக்கப்பட்டது. சீக்கிய பேரரசரான ரஞ்சித் சிங் 1839-ம் ஆண்டு லாகூரில் மரணம் அடைந்தார். குதிரை மீது , கையில் வாளுடன் அமர்ந்து இருக்கும் வகையிலான அந்த சிலையை, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சேதம் செய்யப்பட்ட சிலையை மீண்டும் சீர் செய்வோம் என்று லாகூர் நகர ஆணையம் தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து