சீனாவை தாக்கியது சக்திவாய்ந்த லெகிமா புயல்: 13 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      உலகம்
china Lekhima storm 2019 08 11

பெய்ஜிங் : லெகிமா புயல் சீனாவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கியதில் 13 பேர் பலியானதாகவும். 16 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சீனாவின் கிழக்குப் பகுதிகளில் லெகிமா புயல் தாக்கியது. இதில் வென்சுவா மாநகராட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. புயலைத் தொடர்ந்து கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. லெகிமா புயல் தாக்கியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் புயல் காரணமாக அன்ஹு, ஜிலங்சூ, ஷாங்காய் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிழக்குப் பகுதிகளில் அதிகம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு சீனாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த புயலாக லெகிமா புயல் கருதப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து