முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

வதோதரா : குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் சுமதந்தவாறு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்த காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மகராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள வதோதரா நகரில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் பணியில் போலீஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மோர்பி மாவட்டத்தில் கலையன்பார் கிராமத்தை வெள்ளம் சூழந்துள்ளது. தனித்தீவாக மாறி விட்ட அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மார்பளவு வெள்ளத்தில் பயணம் செய்ய வேண்டய நிலை உள்ளது. படகுகள் வந்து சேர சற்று காலதாமதமான நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் இரண்டு சிறுமிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வந்து காப்பற்றியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பாது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து