சீனாவை தாக்கிய லெகிமா புயலால் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      உலகம்
china Lekhima storm 2019 08 13

பெய்ஜிங் : சீனாவின் மூன்று மாகாணங்களில் கோரத் தாண்டவம் ஆடிய லெகிமா புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் செஜியாங் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன் பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாகாணங்களையும் லெகிமா புயல் தாக்கியது. புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயல் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைத் தேடி வந்தனர்.

அதன் பின்னர் இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணியின் போது மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 26 பில்லியன் யுவான் (3.7 பில்லியன் டாலர்) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து