முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் தாயுடன் மகள்கள் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து மகள் ஒருவர், வாட்ஸ் அப் மெசேஜ் செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா. இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  மானசா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். இதில், அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்து முடித்த அடுத்த நொடியே அதிர்ச்சி அடைந்த அவர், ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார். அங்கு வீடு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது. பின்னர் உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார், மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இறக்க காரணம் என்ன? என்பதை போலீசார் விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜேஸ்வரி, இரு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து