கட்காரி சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
Gadkari 2019 08 13

நாக்பூர் : நாக்பூரில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

மத்திய அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று காலை மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். இதற்காக நாக்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், இண்டிகோ விமானத்தில் ஏறினார்.  விமானம் புறப்பட தயாரான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானத்தை டேக் ஆப் செய்ய முடியவில்லை. புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த அமைச்சர் கட்காரி உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து