சுதந்திர தினத்தையொட்டி 448 கோவில்களில் சிறப்பு வழிபாடு - சென்னையில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அமைச்சர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி 448 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடும் வேட்டி சேலைகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்க திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் 448 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பேரவைத் தலைவர், முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் விவரம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

சுதந்திர தின விழா 15.08.2019 சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து திருக்கோயில்களில் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விவரம்
1. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-19. பேரவைத் தலைவர் .தனபால்
2. சக்தி விநாயகர் திருக்கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78 முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி
3. மருந்தீசுவரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை- 41 துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வம்
4. பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 5 வனத்துறை அமைச்சர் .திண்டுக்கல் சி.சீனிவாசன்
5. அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு, சென்னை - 20 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
6. முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4 கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ
7. காளிகாம்பாள் உடனுறை அருள்மிகு கமடேஸ்வரர் திருக்கோயில், தம்புசெட்டித் தெரு, சென்னை-1. மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி
8. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி
9. சித்தி புத்தி விநாயகர்(ம) சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை-14. மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் .ஜெயக்குமார்
10. பாம்பன் சுவாமி திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 41 . சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.சி.வி.சண்முகம்
11. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, சென்னை-3. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
12. தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை-42. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா
13. மாதவப் பெருமாள் திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை-4. தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்
14. சௌமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை-49. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
15. பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்ஆர்.காமராஜ்
16. மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை-90 கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
17. பாதாளபொன்னியம்மன் திருக்கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை-10. கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
18. கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை-3. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
19. ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதரிப்பேட்டை, சென்னை வேளாண்மைத் துறை அமைச்சர் .துரைக்கண்ணு 20. கச்சாலீசுவரர் திருக்கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை செய்தித் துறை அமைச்சர் .கடம்பூர் ராஜூ
21. வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி , சென்னை-26. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார்
22. அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சென்னை- 34 சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டிஎன்.நடராஜன்
23. சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில், தேவராஜ முதலி தெரு, சென்னை-3 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .கே.சி.வீரமணி
24. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை- 107 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
25. தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி
26. செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில் மேற்கு தாம்பரம், சென்னை-45. ஊரகத் தொழில்துறை அமைச்சர்.பெஞ்சமின்
27. காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை-15. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
28. திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, சென்னை-50. தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பாண்பாட்டுத் துறை அமைச்சர் .கே.பாண்டிய ராஜன்
29. ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர்.ஜி.பாஸ்கரன்
30. காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் .எஸ்.இராமசந்திரன்
31. அருணாச்சலேசுவரர் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை-79 பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி
32. பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில், அயன்புரம், சென்னை-23. பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
33. திருவட்டீஸ்வரர் திருக்கோயில் திருவட்டீஸ்வரன் பேட்டை, சென்னை-5. அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து