முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் விருப்பப்படி காஷ்மீரில் வளர்ச்சி இருக்கும்: பிரதமர் மோடி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,  காஷ்மீர் குறித்த முடிவில் எதிர்ப்புகளும் உள்ளதே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி கூறியதாவது:-

தயவு செய்து காஷ்மீர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பாருங்கள் குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுய நல குழுக்கள் எதிர்க்கின்றனர். அரசியல் பாகுபடின்றி இந்திய மக்கள் இந்த முடிவை பாராட்டியுள்ளனர். அவசியமானது ஆனால் சாத்தியமற்றது என்று மக்கள் கருதியவை தற்போது மெய்யாகியுள்ளது.

370-வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலி உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள். இனி அவர்களுக்கு வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள எனது சகோதர சகோதரிகள் சிறப்பான எதிர்காலத்தை விரும்புகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும், தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து