முதல்வர் எடப்பாடியாரின் வெளிநாட்டு பயணத்தை அரைவேக்காட்டுத்தனமாக விமர்சனம் செய்வதா? ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
RB Udayakumar 2018 7 16

சென்னை : தொழில்முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டு பயணத்தை அரைவேக்காட்டு தனமாக விமர்சிப்பதா என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஓய்வூதியம் பெறுவதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறை தீர்க்கும் வகையிலும் புதிய இணையதளங்களை வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.  இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் 7, 8 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு 155 நிவாரண முகாம்களை ஏற்படுத்தி 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நீலகிரி மக்களுக்கு தமிழக அரசு மீது புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசின் மீதும் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தாங்கள் எங்கே காணாமல் போய் விடுவோமோ என்றும் மக்கள் தங்களை மறந்து விடுவார்களோ என்று பயந்து தி.மு.க.வினர் ஓடி வந்திருக்கிறார்கள். நாங்கள் மழையால் பாதிக்கப்படும் போது எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீஙகள் எங்கே போனீர்கள் என்று மக்கள் எழுப்பிய கேள்விக்கணையால் தி.மு.க. எம்.பி. கோபமடைந்த காட்சியை மக்கள் கண்டார்கள். இது தான் தி.மு.க.வின் நிலை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தை பற்றி கவலைப்படாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பதாக விமர்சித்திருக்கிறார். அபாண்ட பழியை சுமத்தியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவர்களை போல சுற்றுலாவுக்காகவோ மர்ம பயணமாக வேறு தேவைகளுக்காகவோ பயணம் செய்யவில்லை அரசு முறையிலான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பயணம் , உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவே பயணம் மேற்கொண்டிருக்கிறார். தமிழக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தை விமர்சிப்பது அரைவேக்காட்டு தனம். இதன்மூலம் மு.க.ஸ்டாலின் இன்னும் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடையவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து