ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியமானது: ரிஷப் பந்த்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Rishabh Bandh 2019 08 14

ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியமானது என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்துக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான முழுநேர விக்கெட் கீப்பராக செயல்படும் ரிஷப் பந்த், ஒவ்வொரு போட்டியும் மிக மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிஷப் பந்த் கூறியதாவது:- ஒவ்வொரு போட்டியும் எனக்கு மிக மிக முக்கியமானது. அடுத்த 6 மாதம் வரைதான் என்பதில்லை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. நான் கிரிக்கெட்டராகவும், நல்ல மனிதராகவும் முன்னேற்றம் அடைய விரும்புகிறேன். இதைத்தான் எதிர்பார்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து