சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Djokovic 2019 08 14

வாஷிங்டன் : அமெரிக்கா சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிச் அமெரிக்கா நாட்டின் சாம் குவெரேவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றியை தன்வசமாக்கினார். ஜோகோவிச் இதுவரை 16 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் 33 முறை மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரரை தோற்கடித்து பட்டம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து