முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ - வலைதளங்களில் வைரலாகிறது

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : ஈரானில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சியில் பிரபல தமிழ் பாடல் ஒன்றுக்கு சிலர் நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டீவாக இருப்பவர். வித்தியாசமான வீடியோக்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.அந்த வகையில் நேற்று காலை, ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாட்டிற்கு ஆடியபடி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். ஈரானில் உள்ள, ஜிம் ஒன்றில் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கப்போடு போட்ட போக்கிரி படத்தின் மாம்பழமாம் மாம்பழம் பாடலை காலை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இந்தப் பாடலை ஓடவிட்டு இதற்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஜிம்மின் பயிற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.இந்த வீடியோவை அனு சேகல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவே, அதனை ஆனந்த் மகேந்திரா பார்த்து விருப்பப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி் வருகிறது.

இது குறித்து ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், இது நிஜம் தானா? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி நானும் படுக்கையில் இருந்து எழுந்து, தமிழ் பாடல்களை ஒளிக்கச் செய்து புதிய நாளை சந்திக்கப் போகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து