முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி -பிரதமர் மரியாதை

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      இந்தியா
Modi  paying Vajpayee 2019 08 16

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோரும் பங்கேற்றனர். இதே போல் பா.ஜ.க. அலுவலகங்களில் வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி தினமாக பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்படுகிறது. மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து