இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
ravi shastri 2019 05 14

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிதாக தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பி.சி.சி.ஐ. களம் இறங்கியது.இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு ஆய்வு செய்தது. பின்னர் ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்சன், டாம் மூடி உள்பட 6 பேரின் இறுதிப் பட்டியலை தயாரித்தது. அவர்களிடம்  நேர்காணல் நடத்தியது.இறுதியில் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளோம் என்று கபில்தேவ் தெரிவித்தார். ரவி சாஸ்திரி 2021 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து