காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: எதிர்ப்பவர்கள் யாராயினும் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்: பிரக்யா சிங் எம்.பி.

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Pragya Singh 2019 08 20

போபால் : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பா.ஜ.க. எம்.பி. பிரியக்யா சிங் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போபால் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங்,

370 மற்றும் 35ஏ என காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு யாரெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களோ, அவர்கள் அனைவருமே நாட்டுப்பற்று மிக்கவர்கள். அவர்கள் நாட்டை நினைத்து பெருமை அடைவார்கள். பிரதமர் மோடி, அமித்ஷாவை நினைத்து பெருமைப்படுபவர்கள் நாட்டுப்பற்று உடையவர்கள். இந்த நடவடிக்கையினை எதிர்ப்பவர்கள் மற்றும் 370 சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து