75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
rajiv gandhi memorial honour leader 2019 08 20

புது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தி கடந்த 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் 6-வது பிரதமரான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள், இந்தியாவின் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்த நாளான இன்று(நேற்று), என் மரியாதையை செலுத்துகிறேன் என ராஜீவ் காந்தியை நினைவுக் கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து