முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

தங்கம் அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக அளவில் இன்று தங்கத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் அதன் விலையும் கடுமையான ஏற்றத்தை கண்டு வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்கள் நாட்டின் தலைமை வங்கியில் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி) உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்பவே எல்லா நாடுகளும் பணத்தை புழக்கத்தில் விடுகின்றன. இதனால் தங்கத்தை இருப்பு வைத்துக் கொள்வதில் நாடுகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

உலக அளவில் தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா ஆகும். உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட உத்தேச மதிப்பு பட்டியலின்படி அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி தான் அதிக அளவு தங்கத்தை வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தங்க இருப்பு 3367.8 டன் ஆகும். அந்த நாடுகளை தொடர்ந்து இத்தாலி 2451.8 டன், பிரான்ஸ் 2436.1 டன், ரஷ்யா 2207 டன், சீனா 1926.5 டன், சுவிட்சர்லாந்து 1040 டன், ஜப்பான் 765.2 டன், இந்தியா 618.2 டன், நெதர்லாந்து 612.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது. தங்கம் இருப்பு பட்டியலில் இந்தியா இதற்கு முன்பு 10-வது இடத்தில் இருந்தது. தற்போது அது 9-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து